காந்திய இயக்கம் நடைபயணம் நிறைவு

கன்னியாகுமரி, ஜூலை 23: அகில இந்திய காந்திய இயக்கம் சார்பில், தமிழ்நாட்டில் பூரண மதுவிலக்கு கோரி நடைபயணமானது முதற்கட்டமாக செங்கோட்டையில் இருந்து கன்னியாகுமரிக்கும், 2வது கட்டமாக சேலம் முதல் இளம்பிள்ளை வரையும் நடத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டது. இதன் முதற்கட்ட நடைபயணத்தை சோழவந்தானை சேர்ந்த சமூக சேவகர் கருப்பையா காமராஜர் பிறந்த தினமான ஜூலை 15ம் தேதி செங்கோட்டையில் தொடங்கினார். இந்த பயணம் நேற்று கன்னியாகுமரி வந்தடைந்தது. கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பு நடந்த நிறைவு நிகழ்ச்சிக்கு மாவட்ட மதிமுக செயலாளர் வக்கீல் வெற்றிவேல் தலைமை வகித்தார். டாக்டர் நாகேந்திரன், அம்பலவாணன், பீர்முகமது, செல்வகுமார் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்