காணிக்கை எண்ணும் பணியை தடுத்த 4 பேர் மீது வழக்குப்பதிவு

கிருஷ்ணகிரி, ஜூலை 16: கிருஷ்ணகிரி ராசுவீதியில், இந்து சமய அறநிலையத்துறைக்கு சொந்தமான பிரசன்ன பத்மாவதி சமேத சந்திர மவுளீஸ்வரர் கோயில் உள்ளது. இந்த கோயில் ஆய்வாளர் ராமமூர்த்தி தலைமையில், கடந்த 11ம் தேதி கோயில் உண்டியல் திறக்கப்பட்டு, பக்தர்கள் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு வந்த இந்து முன்னணி நிர்வாகிகளான கலைகோபி(51), ரஜினி, வேணுகோபால், சீனிவாசன் ஆகியோர், எங்களிடம் சொல்லாமல் எப்படி உண்டியலை திறக்கலாம் என கூறி, எதிர்ப்பு தெரிவித்து, பணிகளை தடுத்து நிறுத்தினர். இதனால், காணிக்கை எண்ணும் பணி பாதிக்கப்பட்டது. இதுகுறித்து ராமமூர்த்தி அளித்த புகாரின் பேரில், கலைகோபி மற்றும் ரஜினி, வேணுகோபால், சீனிவாசன் ஆகியோர் மீது, கிருஷ்ணகிரி டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்