காஞ்சி சதாவரம், சின்னசாமி நகரில் ரூ.15.78 லட்சத்தில் புதிய ரேஷன் கடை: எம்எல்ஏ, எம்பி திறந்து வைத்தனர்

 

காஞ்சிபுரம், ஜன. 1: காஞ்சிபுரம் சதாவரம், சின்னசாமி நகரில் ரூ.15.78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடையை உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர், காஞ்சிபுரம் எம்பி ெசல்வம் ஆகியோர் திறந்து வைத்தனர். காஞ்சிபுரம் மாநகராட்சி 49வது வார்டு சதாவரம், சின்னசாமி நகரில், உத்திரமேரூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியின் கீழ், ரூ.15.78 லட்சம் மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை மற்றும் பொது நிதியின் கீழ் ரூ.6 லட்சம் மதிப்பீட்டில் போடப்பட்ட பேவர் பிளாக் சாலை மற்றும் சுற்று சுவர் ஆகியவற்றின் திறப்பு விழா நேற்று நடைபெற்றது.

இதில், காஞ்சிபுரம் தெற்கு மாவட்ட செயலாளர் சுந்தர் எம்எல்ஏ, காஞ்சிபுரம் எம்பி செல்வம் ஆகியோர் கலந்துகொண்டு, ரூ.15.78 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட ரேஷன் கடை, ரூ.6 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட பேவர் பிளாக் சாலை ஆகியவற்றை, பொதுமக்கள் பயன்பாட்டிற்காக ரிப்பன் வெட்டி திறந்து வைத்தனர். இதனைத்தொடர்ந்து, ரேஷன் கடையில் பொருட்களை வாங்க நீண்ட வரிசையில் நின்றிருந்த பொதுமக்களுக்கு எம்எல்ஏ, எம்பி, மேயர் ஆகியோர் சர்க்கரை, அரிசி போன்ற பொருட்களை விநியோகித்தனர்.

இந்நிகழ்ச்சியில், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாநகராட்சி ஆணையர் செந்தில்முருகன், மண்டல தலைவர் சாந்தி சீனிவாசன், மாநகர செயலாளர் தமிழ்செல்வன், திமுக பகுதி செயலாளர் தசரதன், மாமன்ற உறுப்பினர் பூங்கொடி தசரதன், பகுதி செயலாளர் சந்துரு, மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் யுவராஜ், மாநகர அவைத்தலைவர் செங்குட்டுவன், துணை செயலாளர் முத்துசெல்வம், மாநகராட்சி கவுன்சிலர்கள் சுரேஷ், சங்கர் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்