காஞ்சிபுரம் மேட்டு தெருவில் பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் விழா: எழிலரசன் எம்எல்ஏ பங்கேற்பு

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மேட்டு தெருவில் மாநகர கழக அலுவலகத்தில் நடைபெற்ற பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் விழாவில் எழிலரசன் எம்எல்ஏ பங்கேற்றார். திமுகவின் முன்னாள் பொதுச்செயலாளர் மறைந்த பேராசியர் க.அன்பழகன் 102வது பிறந்தநாள் விழா தமிழ்நாடு முழுவதும் கொண்டாடப்படுகிறது. அந்த வகையில், காஞ்சிபுரம் மாநகர திமுக சார்பில், மேட்டு தெருவில் மாநகர கழக அலுவலகத்தில் பேராசிரியர் அன்பழகன் பிறந்தநாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது.

இதில், திமுக மாணவரணி செயலாளரும், காஞ்சிபுரம் எம்எல்ஏவுமான எழிலரசன் கலந்துகொண்டு, பேராசியர் அன்பழகனின் படத்திற்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வின்போது, மாநகர செயலாளர் தமிழ்செல்வன், மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட பொருளாளர் ஆறுமுகம், பகுதி செயலாளர்கள் சந்துரு, தசரதன், வெங்கடேசன், திலகர், சிகாமணி மாநகர நிர்வாகிகள் செங்குட்டுவன், முத்து செல்வன், ஜெகநாதன் சுப்பராயன், சாட்சி சண்முகசுந்தரம் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்