காஞ்சிபுரம் சர்வ தீர்த்தம் கரையோரம் காமாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர் கோயில் மகா கும்பாபிஷேகம்

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் சர்வ தீர்த்தம் கரையோரம் காஞ்சி காமகோடி பீடம் மூலம் நிர்வாகம் நடக்கும் திருக்கோயில்களான ஸ்ரீ காமாட்சி அம்பாள் சமேத காசி விஸ்வநாதர், காமேஸ்வரர், ஹிரண்யேஸ்வரர்  கோயில்களில் மகா கும்பாபிஷக விழா நேற்று நடந்தது. காஞ்சி சங்கராச்சாரியார் விஜயேந்திரர் தலைமையில் திருப்பணிகள் தொடங்கப்பட்டு  ஸ்ரீ அக்ஷயம் டிரஸ்ட் மூலம் இந்தக் கோயில்களில் முழுமையான திருப்பணிகள் நடந்து முடிந்தது. இதை தொடர்ந்து 6 கால யாகசாலை பூஜைகள், சிறப்பு தீபாராதனை, கடம் புறப்பாடு நடந்தது. பின்னர் மூலவர் விமானம் மற்றும் மூலவர் சிவபெருமானுக்கு சிறப்பு மகா அபிஷேகம், விசேஷ அலங்காரம் மற்றும் தீபாராதனைகள் நடத்தி், காமேஷ்வர குருக்கள், பிரபாகரன் குருக்கள் தலைமையில், கோயில் விமானத்தில் புனிதநீர் ஊற்றி மகா கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. இதில் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. காஞ்சிபுரம் மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஆலயப் பணிகளை சரவணன் ஸ்தபதி செய்தார்….

Related posts

வாகனங்களில் மீது தாறுமாறாக மோதியதில் 10 பேர் படுகாயம் மதுபோதையில் கார் ஓட்டி விபத்து காஞ்சி தொழிலதிபருக்கு தர்மஅடி: குடியை மறக்க கோயிலுக்கு கயிறு கட்ட வந்தவர் கடைசியாக ஒரு ரவுண்ட் போட்டதால் வினை

காதணி விழா முடிந்து கடலில் குளித்த சிறுமி உட்பட 2 பேர் பலி

கல்லூரி மாணவன் ஏரியில் மூழ்கி பலி