காஞ்சிபுரத்தில் தேசிய பெண் குழந்தைகள் தின விழா

காஞ்சிபுரம், ஜன.31: காஞ்சிபுரத்தில், தேசிய பெண் குழந்தைகள் தின விழா நேற்று நடந்தது. தேசிய பெண் குழந்தைகள் தினத்தை முன்னிட்டு, ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா குழந்தை தொழிலாளர் முறை அகற்றும் திட்டம் சார்பாக, காஞ்சிபுரம் மாநகராட்சியில் உள்ள சங்கரா மகளிர் செவிலியர் கல்லூரியில் தேசிய பெண் குழந்தைகள் தினம் மற்றும் கலை நிகழ்ச்சி நேற்று நடைபெற்றது. சங்கரா செவிலியர் கல்லூரி முதல்வர் ராதிகா தலைமை தாங்கினார். ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியாவின் உதவி பொது மேலாளர் மோகனவேல் முன்னிலை வகித்தார்.

முன்னதாக, காஞ்சிபுரம் முதுநிலை திட்ட மேலாளர் சரவணன் வரவேற்றார்.இதில், சிறப்பு அழைப்பாளராக மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர் சக்திகாவியா கலந்துகொண்டு, பெண் குழந்தைகள் படிக்கும்போது இலக்கை தீர்மானித்து பயணிக்க வேண்டும் எனவும், மாவட்ட நிர்வாகம் மூலம் பெண் குழந்தைகளுக்கு செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்தும் விளக்கினார். பின்னர், தேசிய பெண் குழந்தைகள் தின விழிப்புணர்வு பலகையை வெளியிட, கல்லூரி முதல்வர் பெற்றுக்கொண்டார்.

மேலும், குழந்தைகளின் சட்டம் மற்றும் பாதுகாப்பு குறித்து முதன்மை மேலாளர் கிருபாகரன், பாதுகாப்பு அலுவலர் யசோதரன் ஆகியோர், ஹேண்ட் இன் ஹேண்ட் இந்தியா கலை நிகழ்ச்சி குழு மூலமாக குழந்தைகள் உரிமைகள், குழந்தை திருமண தடை சட்டம் – 2006 மற்றும் பாலியல் குற்றங்களின் குழந்தைகளை பாதுகாக்கும் சட்டம் – 2012 ஆகிய சட்டங்கள் குறித்து நாடகம் மூலம் மாணவிகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். இறுதியாக, ஒன்றிய மேலாளர் நிஷ்யா நன்றி கூறினார். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை முதுநிலை ஒன்றிய மேலாளர்கள் ஏழுமலை, கீதா முதுநிலை ஏற்பாடு செய்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்