காஞ்சிபுரத்தில் சி.வி.எம்.அண்ணாமலை பிறந்தநாள் விழா: எம்எல்ஏக்கள், எம்பி, மேயர் பங்கேற்பு

 

காஞ்சிபுரம்: காஞ்சிபுரத்தில், மறைந்த முன்னாள் அமைச்சர் சி.வி.எம்.அண்ணாமலையின் 107வது பிறந்தநாளையொட்டி, அவரது படத்திற்கு எம்எல்ஏக்கள் சுந்தர், எழிலரசன், காஞ்சிபுரம் எம்பி செல்வம், மேயர் மகாலட்சுமி யுவராஜ் ஆகியோர் மலர்தூவி மரியாதை செலுத்தினர். மறைந்த முன்னாள் அமைச்சரும், அண்ணாவின் நண்பருமான சி.வி.எம்.அண்ணாமலையின் 107வது பிறந்தநாள் விழா காஞ்சிபுரம் மாவட்ட திமுக அலுவலகமான கலைஞர் பவளவிழா மாளிகையில் நேற்று நடைபெற்றது.

விழாவில், உத்திரமேரூர் எம்எல்ஏ சுந்தர் தலைமை தாங்கி, சி.வி.எம்.அண்ணாமலையின் உருவபடத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் காஞ்சிபுரம் எம்பி செல்வம், காஞ்சிபுரம் எம்எல்ஏ எழிலரசன், காஞ்சிபுரம் மாநகராட்சி மேயர் மகாலட்சுமி யுவராஜ், மாவட்ட பொருளாளர் சன்பிராண்டு ஆறுமுகம், ஒன்றிய செயலாளர் பி.எம்.குமார், படுநெல்லி பாபு ஆகியோர் மலரஞ்சலி செலுத்தினர்.

நிகழ்வின்போது மாநகரச் செயலாளர் சி.கே.வி.தமிழ்ச்செல்வன், இளைஞரணி செயலாளர் யுவராஜ், பகுதி செயலாளர்கள் சந்துரு, திலகர், தசரதன், வெங்கடேசன், தலைமை செயற்குழு உறுப்பினர் எம்.எஸ்.சுகுமார், மாநகராட்சி கவுன்சிலர்கள் சுரேஷ், சரஸ்வதி, பாலமுருகன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

Related posts

பக்ரீத் சிறப்பு தொழுகையில் இஸ்லாமியர் திரளாக பங்கேற்பு

காங்கயத்தில் அரசு பேருந்து-கார் மோதல்

கேரளாவிலிருந்து பொள்ளாச்சி மார்க்கெட்டுக்கு அன்னாசி பழம் வரத்து அதிகரிப்பு