கள்ளத்துப்பாக்கியை ஒப்படைக்காவிட்டால் குண்டாஸ்

தர்மபுரி மாவட்டத்தில் கள்ளத்துப்பாக்கி வைத்திருப்போர், தாமாகவே முன்வந்து காவல் துறை அல்லது வனத்துறையிடம் கள்ளத்துப்பாக்கியை ஒப்படைத்தால், அவர்கள் மீது எவ்வித நடவடிக்கை மேற்கொள்ளப்படாது. மாறாக வனத்துறை அல்லது காவல் துறை மூலமாகவோ எவரேனும் கள்ளத்துப்பாக்கி வைத்திருப்பது தெரியவந்தாலோ, வனவிலங்குகளை வேட்டையாடுதல் போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபட்டாலோ, சம்மந்தப்பட்ட நபர்கள் மீது குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும். கள்ளத்துப்பாக்கி வைத்திருப்போர் மற்றும் வனக்குற்ற வழக்குகளில் ஈடுபடுவோர் குறித்து விவரங்கள் தெரிந்தால், 1800 425 4586 என்ற இலவச தொலைபேசி எண்ணுக்கு தகவல் தெரிவிக்கலாம். தகவல் அளிப்பவர்களுக்கு அரசால் தக்க சன்மானம் வழங்கப்படுவதோடு, அவர்களின் பெயர், விவரம் போன்றவை ரகசியமாக பாதுகாக்கப்படும். இவ்வாறு கலெக்டர் சாந்தி தெரிவித்தார்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை