கள்ளச்சாராயம் காய்ச்சி பிடிபட்டவர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைப்பு

 

அரியலூர், ஜூலை 11: அரியலூர் மாவட்டம், புதுக்கோட்டை கிராமம் பூக்கார தெருவை சேர்ந்த லாசர் என்பவரின் மகன் சிம்சோன் (28). இவர் புதுக்கோட்டை கொள்ளிடம் ஆற்றங்கரை அருகில் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்காக ஊறல் போட்டுக்கொண்டிருந்த போது மே 16ம்தேதி அன்று கைது செய்யப்பட்டார். திருமானூர் போலீசாரால் கைது செய்யப்பட்ட இவர் ஜெயங்கொண்டம் கிளைச்சிறையில் அடைக்கப்பட்டு இருந்தார். இவர் மீது பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.

இவர் மீது குண்டர் தடுப்பு சட்டத்தின்படி நடவடிக்கை எடுக்கக்கோரி திருமானூர் காவல் நிலைய பொறுப்பு இன்ஸ்பெக்டர் விஜயலெட்சுமி பரிந்துரை செய்தார். எஸ்பி பெரோஸ்கான் அப்துல்லாவின் மேல் பரிந்துரையை ஏற்று அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆனி மேரி ஸ்வர்ணா உத்தரவிட்டதின் பேரில் குண்டர் தடுப்பு சட்டத்தின் படி சிம்சோன் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அதற்கான ஆணை பிரதிகள் மத்திய சிறைக்கு வழங்கப்பட்டது.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை