கல்வெட்டு மீது லாரி மோதி டிரைவர் பலி

மாமல்லபுரம்: கல்பாக்கம் அடுத்த அடையாளச்சேரி கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள் (51). லாரி டிரைவர். நேற்று மதியம் பெருமாள், கூவத்தூர் அடுத்த நெற்குணப்பட்டில் இருந்து, லாரியில் எம் சாண்ட் மணல் ஏற்றிக் கொண்டு திருப்போரூரில் இறக்கினார். பின்னர், ஓஎம்ஆர் சாலை வழியாக பூஞ்சேரி கூட்ரோடு நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது, அங்குள்ள தனியார் கல்லூரி அருகே சென்றபோது, டிரைவரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி, தறிக்கெட்டு ஓடி அருகில் இருந்த கல்வெட்டு மீது பயங்கரமாக மோதி சாலையோர பள்ளத்தில் இறங்கி விபத்து ஏற்பட்டது. இதில், பெருமாள் படுகாயமடைந்து சம்பவ இடத்திலேயே பலியானார்.தகவலறிந்து மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர்.* மாமல்லபுரத்தில் இருந்து சென்னை செல்லும் கிழக்கு கடற்கரை சாலையில், கடற்கரையை ஒட்டியுள்ள ஒரு தனியார் ரிசார்ட் அருகே சுமார் 50 வயது மதிக்கத்தக்க ஆண் சடலம் கரை ஒதுங்கி கிடந்தது.இதையறிந்த மாமல்லபுரம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று சடலத்தை கைப்பற்றி செங்கல்பட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர். மேலும் போலீசார் வழக்குப்பதிவு செய்து சடலமாக கிடந்தவர் யார், எந்த ஊரை சேர்ந்தவர், அவரை யாராவது கொலை செய்து கடலில் வீசி சென்றனரா என்பது உள்பட பல்வேறு கோணங்களில் தீவிரமாக விசாரிக்கின்றனர்….

Related posts

நெரிசலை குறைக்க குன்னூர் செல்லாமல் காட்டேரி-மஞ்சூர் வழியாக ஊட்டிக்கு செல்ல புதிய பாதை தயார்: விரைவில் பயன்பாட்டுக்கு வருகிறது, வாகன ஓட்டிகள், மக்கள் மகிழ்ச்சி

புரோட்டா சாப்பிட்ட 5 பசுக்கள் பலி

பாஜ ஆட்சி 5 ஆண்டுகள் நீடிப்பது கேள்விகுறிதான்: திருமாவளவன் பேட்டி