கல்லூரி மாணவர்களுக்கு தடகள போட்டிகள்

 

கிருஷ்ணகிரி, ஜன.26: கிருஷ்ணகிரியில் கல்லூரி மாணவ, மாணவிகளுக்கான தடகளப் போட்டியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இது குறித்து மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜகோபால் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: கிருஷ்ணகிரி மாவட்டத்தில், கலைஞர் நூற்றாண்டு விளையாட்டு போட்டிகள், கல்லூரி மாணவ, மாணவியருக்கான தடகள போட்டிகள், வருகிற பிப்ரவரி 2ம் தேதி காலை 8.30 மணிக்கு, கிருஷ்ணகிரி மாவட்ட விளையாட்டு அரங்கில் நடைபெற உள்ளது.

இதில், 100 மீ., 200 மீ., 1,500 மீ., நீளம் தாண்டுதல், குண்டு எறிதல் ஆகிய போட்டிகள் நடக்க உள்ளன. இதில், கிருஷ்ணகிரி மாவட்டத்தை சேர்ந்த கல்லூரி மாணவ, மாணவிகள் இதில் பங்கேற்கலாம். போட்டியில் கல்லூரி படிப்பு சான்றிதழுடன் பங்கேற்க வேண்டும். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்று முதல் 3 இடங்களை பிடிக்கும் வீரர், வீராங்கனைகளுக்கு முதல் பரிசாக ₹3,500, 2ம் பரிசாக ₹1,500, 3ம் பரிசாக ₹500 வழங்கப்படும். மாவட்ட அளவிலான போட்டிகளில் வெற்றி பெற்ற அணிகளுக்கு, பிப்ரவரி 10ம் தேதி, மாவட்ட பொறுப்பு அமைச்சர் சக்கரபாணி தலைமையில் நடக்கும், கலைஞர் நூற்றாண்டு பரிசளிப்பு விழாவில் பரிசுகள் வழங்கப்படும்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்