கலெக்டர் வழங்கினார் மருதமலை முருகன் கோயிலுக்கு வரும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள்

கோவை, ஜன.21: கோவை மருதமலை முருகன் கோயிலில் நடைபெற உள்ள தைப்பூசத்திருவிழாவில் பங்கேற்கும் பக்தர்களுக்கு அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என கோவை மாவட்ட கலெக்டர் கிராந்திகுமார் பாடியிடம் கோயில் நிர்வாகம் சார்பில் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அம்மனுவில் மேலும் கூறியிருப்பதாவது: கோவை மாவட்டம் மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கடந்த ஜனவரி 18-ம் தேதி தொடங்கிய தைப்பூசத் திருவிழா துவங்கி நடைபெற்று வருகிறது. இதில் வரும் 24ம் தேதி திருக்கல்யாண உற்சவ நிகழ்வும், வரும் 25ம் தேதி, திருத்தேர் திருவிழாவும் நடைபெற உள்ளது. இதன் காரணமாக இக்கோயிலுக்கு பல லட்சம் பக்தர்கள் பாதயாத்திரையாகவும் வாகனங்கள் மூலமாகவும் வருவார்கள். மாவட்ட நிர்வாகம் சார்பில் இந்த கோயிலுக்கு வருகை தரும் பக்தர்களுக்கு போதுமான குடிநீர் வசதி, மலை அடிவார பகுதிகளில் பல்வேறு இடங்களில் தற்காலிக கழிவறை வசதி, 108 ஆம்புலன்ஸ் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் உள்ளிட்ட வசதிகளை செய்து தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்