கலெக்டர் தலைமையில் தீண்டாமை ஒழிப்பு உறுதிமொழி ஏற்பு

 

ஊட்டி, ஜன.31: காந்தியடிகள் நினைவு தினத்தையொட்டி ஊட்டியில் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் தீண்டாமை உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சியில் மாவட்ட கலெக்டர் அருணா தலைமை வகித்தார். தொடர்ந்து தீண்டாமையை ஒழிக்க மேற்கொள்ள உறுதிமொழி ஏற்கப்பட்டது. மாவட்ட கலெக்டர் அருணா உறுதிமொழி வாசிக்க தொடர்ந்து அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் உறுதிமொழி ஏற்றுக்கொண்டனர்.

முன்னதாக, அண்ணல் காந்தியடிகளுக்கு கலெக்டர் தலைமையில் அனைத்து அரசுத்துறை அலுவலர்கள் மற்றும் பணியாளர்கள் 2 நிமிட மவுன அஞ்சலி செலுத்தினர். இந்நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலர் கீர்த்தி பிரியதர்சினி, மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) தனப்பிரியா, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர் வாஞ்சிநாதன் உட்பட அரசுத்துறை அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை