கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலில் ₹18 லட்சத்து 57 ஆயிரம் காணிக்கை

கன்னியாகுமரி, ஏப். 24: கன்னியாகுமரி பகவதியம்மன் கோயில் உண்டியல்களில் 18 லட்சத்து 57 ஆயிரத்து 771 ரூபாய் காணிக்கையாக கிடைத்துள்ளது. கன்னியாகுமரியில் பிரசித்தி பெற்ற பகவதியம்மன் கோயில் உள்ளது. கன்னியாகுமரிக்கு வரும் பக்தர்கள் திரிவேணி சங்கமம் கடலில் புனித நீராடி பகவதி அம்மனை தரிசித்து வருகின்றனர். கோயிலுக்கு வரும் பக்தர்கள் காணிக்கை ெசலுத்த 17 நிரந்தர உண்டியல்கள் வைக்கப்பட்டுள்ளன. இந்த காணிக்கை உண்டியல்கள் மாதந்தோறும் திறந்து எண்ணப்படுகின்றன. இந்நிலையில் நேற்று 17 உண்டியல்களையும் திறந்து காணிக்கை பணம் எண்ணும் பணி நடந்தது. திருக்கோயில்களின் இணை ஆணையர் ரத்னவேல் பாண்டியன், அறங்காவலர் குழு தலைவர் பிரபா ராமகிருஷ்ணன், உதவி ஆணையர் தங்கம், ஆய்வாளர் சரஸ்வதி, கோயில் மேலாளர் ஆனந்த் முன்னிலையில் காணிக்கை எண்ணும் பணி தொடங்கியது. திருக்கோயில் நிர்வாக ஊழியர், பள்ளி, கல்லூரி மாணவர்கள், ஆதிபராசக்தி செவ்வாடை பக்தர்கள் ஆகியோர் காணிக்கை எண்ணும் பணியில் ஈடுபட்டனர். இதில் 18 லட்சத்து 57 ஆயிரத்து 771 ரூபாய் மற்றும் தங்கம் 13 கிராம் 540 மில்லி கிராம், வெள்ளி 27 கிராம் 130 மில்லிகிராம், வெளிநாட்டு பணம் ஆகியவை காணிக்கையாக கிடைத்துள்ளன.

Related posts

திருத்தங்கல்லில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வில்லிபுத்தூர் அருகே இலவச தென்னை கன்றுகள் வழங்கல்

குறைவான செலவில் குச்சி முருங்கை சாகுபடி செய்து நிரந்தர வருமானம் பெறலாம்: வேளாண்துறை ஆலோசனை