கன்னியாகுமரி, சுசீந்திரம் கோயில்களில் ஒன்றிய அமைச்சர்கள் சாமி தரிசனம்

கன்னியாகுமரி, செப்.2: கன்னியாகுமரி பகவதியம்மன், சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி ஆகிய கோயில்களில் ஒன்றிய அமைச்சர்கள் பர்ஷோத்தம் ரூபாலா, முருகன் ஆகியோர் நேற்று காலை சாமி தரிசனம் செய்தனர். இந்தியா முழுவதும் கடலோர கிராமங்களை ஆய்வு செய்து மீனவர்களின் குறைகளை தீர்க்கும் வகையில் ஒன்றிய அரசு பரிக்கிரமா என்ற யாத்திரையை தொடங்கியுள்ளது. இந்த குழுவில் இடம்பெற்றுள்ள ஒன்றிய மீன்வளத்துறை அமைச்சர் பர்ஷோத்தம் ரூபாலா, இணை அமைச்சர் முருகன் மற்றும் அதிகாரிகள் நேற்று முன்தினம் கன்னியாகுமரி மாவட்ட மீனவ கிராமங்களுக்கு சென்றனர். இதையடுத்து ேநற்று காலை ஒன்றிய அமைச்சர்கள் கன்னியாகுமரி திரிவேணி சங்கமம் கடற்பகுதிக்கு வந்தனர். தொடர்ந்து சூரியன் உதயமாகும் ரம்மியமான காட்சியை கண்டு ரசித்தனர். அதையடுத்து உலக புகழ்பெற்ற கன்னியாகுமரி பகவதியம்மன் கோயிலுக்கு வந்தனர். அப்போது கோயில் நிர்வாகம் சார்பில் மேலாளர் ஆனந்த் வரவேற்றார். 2 அமைச்சர்களும் பகவதியம்மனை தரிசனம் செய்தனர். பின்னர் அங்கிருந்து சுசீந்திரம் தாணுமாலயன் சுவாமி கோயிலுக்கு சாமி தரிசனம் செய்வதற்காக புறப்பட்டு சென்றனர். இந்த நிகழ்ச்சியில் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய பாஜ பொறுப்பாளர் சுபாஷ் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு