கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு பைக் பேரணிக்கு அனுமதி மறுத்ததால் கார் பேரணி-பாஜ- போலீஸ் இடையே வாக்குவாதம்

கன்னியாகுமரி : கன்னியாகுமரியில் இருந்து சென்னைக்கு பா.ஜ சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட பைக் பேரணிக்கு போலீசார் அனுமதி மறுத்தனர்.  இதையடுத்து காரில் பேரணியாக சென்றனர்.ஒன்றிய அரசின் 8 ஆண்டுகள் சாதனை விளக்க பைக் பேரணி பாஜ மாநில இளைஞரணி தலைவர் ரமேஷ் சிவா தலைமையில் நேற்று கன்னியாகுமரி காந்தி மண்டபம் முன்பிருந்து புறப்பட்டு சென்னை வரை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.இந்த நிலையில் நேற்று காலை கன்னியாகுமரியில் பாஜவினர் குவிந்தனர். ஆனால் பாதுகாப்பு  காரணமாக இந்த நிகழ்ச்சிக்கு   போலீசார் அனுமதி மறுத்தனர். இதனையடுத்து பாஜவினர் மற்றும் போலீசார் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. தொடர்ந்து சம்பவ இடத்தில் போலீசார் குவிக்கப்பட்டனர்.நாகர்கோவில் ஏடிஎஸ்பி ஈஸ்வரன் மற்றும் கன்னியாகுமரி டிஎஸ்பி ராஜா ஆகியோர் பாஜ நிர்வாகிகளிடம் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். இதில் எம்.ஆர்.காந்தி எம்எல்ஏ, பாஜ மாவட்ட தலைவர் தர்மராஜ், மாவட்ட பொருளாளர் முத்துராமன், மாநில மகளிர் அணி தலைவர் உமாரதி ராஜன், மாநில செயலாளர் மீனா தேவ், அகஸ்தீஸ்வரம்  ஒன்றிய பார்வையாளர் சி.எஸ்.சுபாஷ், இளைஞரணி மாநில பொதுச்செயலாளர் ராஜேஷ், மாநில நிர்வாகிகள் பாலாஜி நயினார், பூபதி பாண்டியன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.நீண்டநேர பேச்சுவார்த்தைக்கு பின்னர் உடன்பாடு ஏற்பட்டது. இதையடுத்து பைக் பேரணியை கார் பேரணியாக நடத்த போலீசார் அனுமதி அளித்தனர். சம்பவ இடத்தில் போலீசார் அதிகளவில் குவிக்கப்பட்டதால் அங்கு பரபரப்பான சூழல் ஏற்பட்டது. தொடர்ந்து கன்னியாகுமரி காந்தி மண்டபத்தில் இருந்து கார் பேரணியாக பாஜகவினர் புறப்பட்டு சென்றனர்.இந்நிலையில் பாஜ இளைஞரணி அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தலைவர் கிருஷ்ணராஜா உட்பட 10 பேர் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார் அவர்களை கைது செய்தனர்….

Related posts

தூத்துக்குடி துறைமுகத்தில் முந்திரி ஏற்றுமதியாளரிடம் ரூ.6 கோடி மோசடி

3 நாள் பயணமாக தமிழக ஆளுநர் ரவி டெல்லி சென்றார்

தரமணி உலகத் தமிழாராய்ச்சி கல்லூரியில் மாணவர் சேர்க்கை