கண்ணாடி மாளிகையில் தூலிப், லில்லியம் மலர் அலங்காரம்

 

ஊட்டி,மார்ச்19: ஊட்டி தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள தூ லிப் மற்றும் பல வண்ண லில்லியம் மலர் அலங்காரங்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. ஊட்டிக்கு நாள் தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வருகின்றனர். இங்கு வரும் சுற்றுலா பயணிகளில் பெரும்பாலானவர்கள் தாவரவியல் பூங்காவிற்கு செல்கின்றனர்.இங்கு செல்லும் சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் பூங்காவில் பல லட்சம் மலர் செடிகள் நடவு செய்யப்பட்டு அதில் மலர்கள் பூத்துக் குலுங்கும்.

குறிப்பாக, கோடை காலமான ஏப்ரல் மற்றும் மே மாதத்தில் பூங்கா முழுவதிலும் மலர்கள் பூக்கும் வகையில் செடிகள் நடவு செய்யப்பட்டுள்ளன.இச்சடிகளில் வரும் ஏப்ரல் மாதமே மலர்களை காண முடியும். இந்நிலையில்,கோடை சீசன் மற்றும் மே மாதம் நடக்கும் மலர் கண்காட்சிக்காக தற்போது பூங்காவை தயார் செய்யும் பணிகள் மும்முரமாக நடந்து வருகிறது.தற்போது பூங்கா முழுவதிலும் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளது.

மேலும், 35 ஆயிரம் தொட்டிகளிலும் நாற்றுகள் நடவு செய்யப்பட்டுள்ளன.இதனால், பூங்கா முழுவதிலும் மலர்கள் இன்றி காட்சியளிக்கிறது. அதேசமயம், சுற்றுலா பயணிகள் ஏமாற்றம் அடையாமல் இருக்க புதிய கண்ணாடி மாளிகையில் பல்வேறு மலர் தொட்டிகளை கொண்டு மலர் கோபுரம் அமைக்கப்பட்டுள்ளது.

இதனை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்வதுடன்,அதன் அருகே நின்று புகைப்படமும் எடுத்துச் செல்கின்றனர். சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் தற்போது கண்ணாடி மாளிகையில் தூலிப் மற்றும் லில்லியம் மலர் செடிகளும் அலங்கரித்து வைக்கப்பட்டுள்ளன. இந்த மலர்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. பல வண்ணங்களில் காணப்படும் இந்த லில்லியம் மற்றும் தூலிப் மலர்கள் அருகே நின்று சுற்றுலா பயணிகள் புகைப்படம் எடுத்துச் செல்கின்றனர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை