கடன் தொல்லையால் டீ கடைக்காரர் தற்கொலை

 

ஈரோடு, மார்ச் 14: கோபி, வாஸ்து நகர், கபிலர் வீதியை சேர்ந்தவர் தனசேகர் (38). இவரது மனைவி கவுசல்யா (36). தனசேகர் தனது தந்தையுடன் சேர்ந்து டீ கடை வைத்து நடத்தி வந்தார். தனசேகர் வங்கி மற்றும் தெரிந்த நண்பர்களிடம் அளவுக்கு அதிகமாக கடன் வாங்கியதாக கூறப்படுகின்றது. டீ கடையில் போதிய வருமானம் இல்லாததால் கடன் தொகையை சரிவர திருப்பி செலுத்த முடியாமல் அவதிப்பட்டு வந்தார். இது தொடர்பாக கடந்த சில நாட்களாக குடும்பத்தினருடன் புலம்பி வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் தனியாக இருந்த தனசேகர் பெட்ரூமில் உள்ள கொக்கியில் வேட்டியால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து கோபி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

திருத்தங்கல்லில் சாலையின் நடுவே ஏற்பட்ட பள்ளத்தை மூட வேண்டும்: பொதுமக்கள் கோரிக்கை

வில்லிபுத்தூர் அருகே இலவச தென்னை கன்றுகள் வழங்கல்

குறைவான செலவில் குச்சி முருங்கை சாகுபடி செய்து நிரந்தர வருமானம் பெறலாம்: வேளாண்துறை ஆலோசனை