கஞ்சா விற்ற 4 வாலிபர்கள் கைது

நெல்லிக்குப்பம், ஆக. 3: பண்ருட்டி அருகே சிலம்பிநாதன்பேட்டை கிராமத்தில் உள்ள செம்மண் குவாரியில் மர்ம நபர்கள் கஞ்சா விற்பனை செய்து வருவதாக நடுவீரப்பட்டு காவல்துறைக்கு தகவல் கிடைத்தது. இதன்பேரில் போலீசார் நேற்று முன்தினம் அங்கு சென்று பார்த்தபோது, அங்கு கஞ்சா விற்பனை செய்து கொண்டிருந்த சாத்தமாம்பட்டு கிராமத்தைச் சேர்ந்த ராஜேஷ் (26), சிலம்பிநாதன்பேட்டை சதீஷ்குமார் (25), சி.என்.பாளையம் சரவணன் (21), பணிக்கன்குப்பம் நவீன் (25) ஆகிய நான்கு பேரை சுற்றிவளைத்து கைது செய்தனர். மேலும் அவர்களிடம் இருந்து 300 கிராம் கஞ்சா பொட்டலத்தை பறிமுதல் செய்தனர். இதுகுறித்து நடுவீரப்பட்டு போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். நகர பகுதிகளில் மட்டுமே கஞ்சா விற்பனை நடைபெற்று வந்த நிலையில் தற்போது கிராம பகுதிகளிலும் கஞ்சா விற்கப்படுவதால், இவர்களுக்கு கஞ்சா எங்கிருந்து எப்படி விற்பனைக்கு வருகிறது? என போலீசார் விசாரித்து வருகின்றனர். கைது செய்யப்பட்ட ராஜேஷ் உள்பட 4 பேரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்