கஞ்சா விற்ற 4 பேர் கைது

கோவை, ஆக.3: கோவை போத்தனூர் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, சுந்தராபுரம் ஓம்சக்தி கோவில் அருகே சந்தேகம்படும்படி நின்று கொண்டிருந்த 4 பேரை பிடித்து விசாரித்தனர். இதில் அவர்கள், முன்னுக்குபின் முரணாக பதில் அளித்தனர். சோதனை செய்தபோது அவர்கள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டது தெரியவந்தது. இதனையடுத்து திருநெல்வேலி மாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த பண்டாரமுத்து (24), செல்வகண்ணன் (19), சுந்தராபுரம் கணேசபுரத்தை சேர்ந்த அறிவழகன் (22) மற்றும் 17 வயது சிறுவன் ஆகிய 4 பேரை கைது செய்தனர். பின்னர், 4 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி 3 பேரை சிறையில் அடைத்தனர். 17 வயது சிறுவனை சீர்திருத்த பள்ளியில் சேர்த்தனர். அவர்களிடம் இருந்து ஒரு கிலோ 100 கிராம் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்