கஞ்சா தகராறில் மோதல் பெட்ரோல் குண்டு வீசிய சிறுவன் கைது: கூட்டாளிகளுக்கு வலை

 

தண்டையார்பேட்டை, ஜூலை 11: ராயபுரம் கிரேஸ் கார்டன் 2வது தெருவை சேர்ந்த 17 வயது சிறுவன், அதே பகுதியை சேர்ந்த 16 வயது சிறுவனுக்கு கஞ்சா புகைக்க கற்றுக்கொடுத்ததாக தெரிகிறது. இதனை அறிந்த பாதிக்கப்பட்ட சிறுவனின் தந்தை, 17 வயது சிறுவனை கண்டித்துள்ளார். இதனால் கஞ்சா புகைக்க கற்றுக்கொடுத்த சிறுவனுக்கும், எதிர்தரப்பினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இருதரப்பினரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதனால் கோபத்தில் இருந்த கஞ்சா புகைக்க கற்றுக்கொடுத்த 17 வயது சிறுவன், நேற்று முன்தினம் இரவு பெட்ரோல் குண்டுடன் எதிர்தரப்பு சிறுவனின் வீட்டுக்கு தனது 2 கூட்டாளிகளுடன் சென்றுள்ளான்.

அப்போது அங்கு யாரும் இல்லாததால் பெட்ரோல் குண்டை சாலையோரத்தில் இருந்த மின் இணைப்பு பெட்டி மீது வீசிவிட்டு அவர்கள் தப்பிச் சென்று விட்டனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் ராயபுரம் போலீசுக்கு தகவல் தெரிவித்தனர். போலீசார் கண்காணிப்பு கேமரா காட்சியை ஆய்வு செய்து விசாரணை நடத்தினர். இதைத்தொடர்ந்து பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கில் 17 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். அவன் மீது ஏற்கனவே 6 குற்றவழக்குகள் உள்ளது குறிப்பிடத்தக்கது. மேலும் தலைமறைவாக உள்ள அவனது கூட்டாளிகளான 2 சிறுவர்களை தேடி வருகின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்