கஞ்சா கடத்த முயன்ற 3 பேர் கைது

கம்பம், மே 23: கம்பத்தில் இருந்து கேரளாவிற்கு கஞ்சா கடத்துவதாக கம்பம் வடக்கு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் பேரில் சப் இன்ஸ்பெக்டர் செந்தில் குமார் தலைமையில் போலீசார் கம்பம் வாரச்சந்தை பகுதியில் தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகப்படும் படியாக அவ்வழியாக ஸ்கூட்டரில் வந்த 2 பேர் போலீசாரை கண்டதும் தப்பியோட முயன்றனர். அவர்களை போலீசார் மடக்கி பிடித்து சோதனை மேற்கொண்டனர். அப்போது ஸ்கூட்டரில் 1 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது தெரியவந்தது. கஞ்சாவை பறிமுதல் செய்த போலீசார் விசாரணை மேற்கொண்டனர். இதனையடுத்து போலீசார் வழக்கு பதிந்து 18 வயது வாலிபர், அவரது அக்கா மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோரை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்