ஓட்டலில் ஆயில் மசாஜ்; 2 புரோக்கர் கைது

 

கோவை, ஆக. 23: கோவை ஆர்.எஸ்.புரம் டிவி சாமி ரோட்டில் உள்ள ஒரு ஓட்டலில் மசாஜ் சென்டர் இருப்பதாகவும், அங்கே விபசாரம் நடப்பதாகவும் ஈரோட்டை சேர்ந்த வாலிபர் ஒருவர் புகார் தெரிவித்தார். ஆர்.எஸ்.புரம் போலீசார் சோதனை நடத்தியபோது அங்கே விபசாரத்தில் 4 பெண்கள் ஈடுபடுத்தப்பட்டு வருவது தெரியவந்தது. போலீசார் 4 பேரையும் மீட்டு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.

மசாஜ் சென்டரில் விபசாரம் நடத்திய மசாஜ் சென்டர் உரிமையாளர் கோவை நீலாம்பூரை சேர்ந்த சக்தி கிஷோர் (30) மற்றும் வரவேற்பாளரான துடியலூர் பன்னிமடை தாமு நகரை சேர்ந்த பிரின்ஸ் லிப் (29) ஆகிய இருவரை கைது செய்தனர். இவர்கள் பேஸ்புக், வாட்ஸ் அப், சில சமூக வலைதளங்களின் மூலமாக வாடிக்கையாளர்களை ஈர்த்து வரவழைத்து ஆயில் மசாஜ் செய்வதாக கூறி விபசாரத்திற்கு அழைத்துள்ளனர். மசாஜ் செய்ய தனி கட்டணம், விபசாரத்திற்கு தனி கட்டணம் வசூலித்து வந்தனர். மசாஜ் செய்யும் பெண்களுக்கு மாத சம்பளம் வழங்கி வந்துள்ளனர்.

கடந்த சில மாதங்களாக இவர்கள் பல்வேறு ஓட்டல்களில் மசாஜ் சென்டர் நடத்தி வந்துள்ளனர். முறையான அனுமதி, உரிமம் பெறாமல் விபசார நோக்கத்தில் இவர்கள் மசாஜ் சென்டர் நடத்தியது தெரியவந்தது. ஆண்களுக்கு பெண்கள் மூலமாக மசாஜ் செய்யக்கூடாது. அப்படி செய்வது விதிமுறை மீறல் என போலீசார் தெரிவித்தனர். போலீசார் கண்டுபிடிக்காமல் இருக்க பல்வேறு இடங்களில் பெயர் பலகை வைக்காமல் மசாஜ் சென்டர் நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த மசாஜ் சென்டர்களை போலீசார் கண்காணித்து வருகின்றனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு