ஓசூரில் இலவச மருத்துவ முகாம்

ஓசூர்: ஓசூர் மாநகராட்சி 22வது வார்டு முனீஸ்வர் நகரில், முதல்வரின் விரிவான மAருத்துவ காப்பீட்டு திட்டம் மற்றும் இலவச மருத்துவ முகாம் நேற்று நடந்தது. மாநகராட்சி பொது சுகாதார குழு தலைவர் மாதேஸ்வரன், முகாமை துவக்கி வைத்தார். டாக்டர் பிரியதர்ஷினி தலைமையிலான மருத்துவக் குழுவினர் இருதய பிரச்னைகள், மூட்டு தேய்மானம், தைராய்டு கட்டிகள், கர்ப்பப்பை கட்டிகள், குழந்தையின்மைக்கான ஆலோசனைகள் மற்றும் ரத்த அழுத்தம், சர்க்கரை அளவு பரிசோதனை செய்தனர். இதில் நூற்றுக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு பரிசோதனை செய்து கொண்டனர். மேலும், 45 வயதிற்கு மேற்பட்ட பொதுமக்களுக்கு இ.சி.ஜி., பரிசோதனை இலவசமாக மேற்கொள்ளப்பட்டது. முனீஸ்வர் நகர் குடியிருப்போர் நலச் சங்க தலைவர் பிரகாஷ், நிர்வாகிகள் மணிகண்டன், சித்ரா, யசோதா ராணி, சின்னபையன், தமிழ்வாணன் உட்பட பலர் பங்கேற்றனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு