ஒரு கிலோ கஞ்சாவுடன் வாலிபர் கைது

திருத்துறைப்பூண்டி, ஏப்.11: திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி அருகே உள்ள ராயநல்லூர் பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக ஆலிவலம் காவல் நிலையத்திற்கு தகவல் கிடைத்தது. தகவல் அடிப்படையில் திருத்துறைப்பூண்டி டிஎஸ்பி சோமசுந்தரம், இன்ஸ்பெக்டர் மாரிமுத்து, சப்இன்ஸ்பெக்டர் புஸ்பநாதன் உள்ளிட்டோர் ராயநல்லூர் கடை தெருவில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு வாலிபரை சந்தேகத்தின் பேரில் தீவிர விசாரணை செய்ததில் அவர் ராயநல்லூர் செட்டிமுளை தென்பாதி பகுதியில் சேர்ந்த ராஜேஷ் கண்ணன் (26) என்பது தெரிய வந்தது. அவரை சோதனை செய்தபோது அவரிடம் இருந்து ஒரு கிலோ 250 கிராம் கஞ்சா இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து கஞ்சாவை பறிமுதல் செய்து ராஜேஷ் கண்ணனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Related posts

கோயில் திருவிழாவில் நாட்டு வெடி வெடித்ததில் தனியார் நிறுவன ஊழியர் காயம்

சுங்க கட்டண உயர்வை திரும்ப பெற வேண்டும்

திருவானைக்கோவில் அருகே பனையபுரம் பள்ளியில் அமைச்சர் மகேஷ் பொய்யாமொழி திடீர் ஆய்வு