ஒரத்தூர் சாம்பான் கோயில் காப்பு கட்டுதல் நிகழ்ச்சி

 

நீடாமங்கலம், மார்ச் 19: திருவாரூர் மாவட்டம் நீடாமங்கலம் அருகில் உள்ள ஒரத்தூர் திருவள்ளுவர் நகரில் அருள் பாலித்து வரும் சாம்பான் கோயில் 11ம் ஆண்டு பங்குனி திருவிழா நேற்று காப்பு கட்டுதலுடன் தொடங்கியது. இக்கோயிலில் நேற்று மாலை காரியசித்தி விநாயகர், காரிய அழகர் ஐயனார், கருப்பன்னசாமி, சாம்பான் மூர்த்திகள், முனீஸ்வரர், செல்லியம்மன், பெரியகுதிரை ஆகிய தெய்வங்களுக்கு காப்பு கட்டுதல் நிகழ்ச்சி நேற்று மாலை நடந்தது. இக்கோயிலில் வரும் 25ம் தேதி திருவள்ளுவர் நகர் கிராமவாசிகள் சார்பில் காலை பால் குடம் எடுத்தல், ஐயனாருக்கு அபிஷேகம், குதிரை எடுத்து வரும் நிகழ்ச்சி, மாலை மாவிளக்கு போடுதல்,காரியஅழகர்,ஐயனார்,வீதியுலா நிகழ்சி மற்றும்,அன்னதானம்,தடை பெற உள்ளது. 26ம் தேதி காப்பு களைத்தல், 27ம் தேதி, அபிஷேக ஆராதனையும், 28ம் தேதி மாலை விடையாற்றியும் நடை பெற உள்ளது.இதற்கான ஏற்பாடுகளை திருவள்ளுவர் நகர்,காமாட்சி நகர் ஒரத்தூர் கிராம வாசிகள் மற்றும் இளைஞர் நற்பணி மன்றத்தினர் செய்து வருகின்றனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்