ஒன்றிய அரசு பள்ளியில் சிறுவனை நாய் கடித்தது: தொடர் சம்பவத்தால் அச்சம்

 

சென்னை, பிப்.2:திருமுல்லைவாயல், சத்தியமூர்த்தி நகரை சேர்ந்தவர் சத்யநாராயணன். இவரது மகன் மனிஷ் (6), ஒன்றிய அரசுக்கு சொந்தமான கேந்திரிய வித்யாலயா பள்ளியில் மழலையர் வகுப்பில் படித்து வருகிறான்.நேற்று முன்தினம் மாலை, உடற்கல்வி நேரத்தில் மனிஷ் சக மாணவர்களுடன் பள்ளி மைதானத்தில் விளையாடி கொண்டிருந்தான்.

அப்போது, பள்ளி வளாகத்தில் திரிந்த தெரு நாய், விளையாடிக் கொண்டிருந்த மனிஷை துரத்தி, காலில் கடித்துள்ளது. அவனின் அலறல் சத்தத்தை கேட்டு அங்கிருந்தவர்கள், நாயை விரட்டிவிட்டு, சிறுவனை மீட்டனர். தகவலறிந்து வந்த பெற்றோர், சிறுவனை மீட்டு ஆவடி அரசு மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். கடந்த 2 தினங்களுக்கு முன்பு இதே பள்ளியில் பயிலும் 2ம் வகுப்பு மாணவனையும், பள்ளி வளாகத்தில் நாய் கடித்தது குறிப்பிடத்தக்கது. தொடர் சம்பவத்தால் மாணவர்கள் அச்சத்தில் உள்ளனர்.

Related posts

36 ஆண்டுகளுக்கு பிறகு நடக்கிறது மத் பாம்பன் குமரகுருதாசர் கோயிலில் ஜூலை 12ம் தேதி குடமுழுக்கு விழா: அறநிலையத்துறை தகவல்

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு 51 வயது நபருக்கு 10 ஆண்டு சிறை: சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு

இன்னுயிர் காப்போம் திட்டத்தில் 61 ஆயிரம் பேருக்கு ரூ.45.87 கோடியில் சிகிச்சை