ஒட்டன்சத்திரத்தில் இலவச செஸ் பயிற்சி முகாம்

ஒட்டன்சத்திரம்: ஒட்டன்சத்திரம் கான்பிடென்ட் செஸ் அகாடமி சார்பில் ஒட்டன்சத்திரம் பகுதிகளை சேர்ந்த 5 வயது முதல் 21 வயதுக்குட்பட்ட பள்ளி- கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு செப்டம்பர் 29, 30 ஆகிய இரண்டு நாட்கள் இலவச செஸ் பயிற்சி அளிக்கப்படுகிறது. இம்முகாமில் செஸ் விளையாடுதல் கற்று தரப்படும். மேலும் மாவட்ட, மாநில, தேசிய அளவிலான போட்டிகளில் பங்கேற்பதற்கான வழிமுறைகள், விதிமுறைகள் சிறப்பாக செயல்படுவது என பல்வேறு வகையான முறைகள் கற்று தரப்படும்.

இம்முகாமில் கலந்து கொள்ள விரும்புவோர் ஒட்டன்சத்திரம் காமாட்சி அம்மன் கோயில் எதிரில் உள்ள கான்பிடென்ட் செஸ் அகாடமிக்கு நாளை செப்டம்பர் 29ம் தேதி காலை 10 மணிக்குள் வர வேண்டும். மேலும் விபரங்களுக்கு மாநில சதுரங்க நடுவரும், கான்பிடென்ட் செஸ் அகாடமி செயலாளர் சண்முக குமாரை 97878 66583 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்