ஏரல் பகுதியில் இஸ்லாமிய அமைப்பு சார்பில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரண பொருட்கள்

ஏரல்,ஜன.13: ஏரல் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் மழை, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு தமிழ்நாடு தென்மண்டல ஜமாஅத்தே இஸ்லாமிய ஹிந்த் மற்றும் இந்திய மாணவர் இஸ்லாமிய அமைப்பும் இணைந்து பிரிட்ஜ், கிரைண்டர், காஸ் அடுப்பு, பள்ளி பேக் உட்பட நிவாரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி ஏரல் பெரியமணரா பள்ளிவாசல் எம்சி ஹாலில் நடந்தது. இதில் ஏரல் தாசில்தார் கோபாலகிருஷ்ணன், ஏரல் சுற்றுவட்டார இஸ்லாமிய பேரிடர் நிவாரண கூட்டமைப்பின் தலைவர் பாக்கர்அலி, செயலாளர் அஹமது ஹமீது, ஜமாத் செயலாளர் சீனிஹாஜியார், பேரிடர் கூட்டமைப்பினரும், ஆலீம்களும், ஜமாத்தார்களும் கலந்து கொண்டு நிவாரண பொருட்களை பயனாளிகளுக்கு வழங்கினர்.

Related posts

பட்டாசு திரி பதுக்கிய இருவர் கைது

இன்ஸ்டாகிராம் நண்பர் யார்? குழந்தையை தவிக்கவிட்டு இளம்பெண் மாயம்: போலீசார் விசாரணை

சாதனை மாணவிகளுக்கு திமுக சார்பாக கல்வி நிதி உதவி