எலவனாசூர்கோட்டை-திருக்கோவிலூர் சாலை குண்டும், குழியுமாக மாறியதால் வாகன ஓட்டிகள் கடும் அவதி

உளுந்தூர்பேட்டை : உளுந்தூர்பேட்டையில் இருந்து திருக்கோவிலூர் செல்லும் சாலையில் எலவனாசூர்கோட்டையில் இருந்து புகைப்பட்டி, எறையூர், கூத்தனூர் உள்ளிட்ட கிராமங்கள் வழியாக தினந்தோறும் ஏராளமான பேருந்துகள் சென்று வருகிறது. இந்நிலையில் இந்த சாலையில் எலவனாசூர்கோட்டையில் இருந்து சுமார் 10 கிலோ மீட்டர் சாலைகள் குண்டும், குழியுமாக சாலையின் நடுவே அதிகளவு பள்ளங்கள் உள்ளதால் இந்த சாலையின் வழியாக இருசக்கர வாகனத்தில் செல்பவர்கள் கடும் சிரமப்பட்டு செல்வதுடன் பல வாகனங்கள் தினந்தோறும் சிறு விபத்துகளில் சிக்கிக்கொள்ளும் நிலை உள்ளது. இதுதொடர்பாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து சாலையில் உள்ள பள்ளங்களை உடனடியாக மூடுவதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்….

Related posts

டெல்டா குறுவை சாகுபடி சிறப்பு தொகுப்பு திட்ட பயன் முறையாக சென்று சேருவதை அதிகாரிகள் உறுதி செய்ய முதல்வர் ஆணை

சென்னை நந்தனம் அரசு ஆண்கள் கலைக்கல்லூரியை இருபாலர் பயிலும் கல்லூரியாக மாற்றி உயர் கல்வித்துறை உத்தரவு

பிளஸ் 2 மறுகூட்டல் முடிவுகள் ஜூன் 18-ல் வெளியீடு