எருது விடும் விழா கோலாகலம்

ராயக்கோட்டை, மார்ச் 17: ராயக்கோட்டையில், எருது விடும் விழா கோலாகலமாக நடைபெற்றது. ராயக்கோட்டையில் நேற்று எருது விடும் விழா நடைபெற்றது. இதில், கன்று மற்றும் 2 பல் போட்ட கன்றுகளுக்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது. தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு, மாரண்டஅள்ளி, பஞ்சப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும், ஓசூர், பேரிகை, சூளகிரி, உத்தனப்பள்ளி உள்ளிட்ட பகுதிகளிலிருந்தும் 1000க்கும் மேற்பட்ட காளைகள் பங்கேற்றன. காலை 6 மணிக்கு போட்டி தொடங்கியது. பிற்பகல் 3 மணி வரையிலும் போட்டி நடைபெற்றது.

குறிப்பிட்ட தூரத்தை குறைவான நேரத்தில் கடந்த கன்றுகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அதன்படி, முதல் பரிசு ₹50 ஆயிரம், 2வது பரிசு ₹40 ஆயிரம், 3வது பரிசு ₹30 ஆயிரம் என 101 பரிசுகள் வழங்கப்பட்டன. ஆறுதல் பரிசாக சில்வர் குடம், குத்துவிளக்கு மற்றும் காமாட்சி விளக்கு போன்றவை வழங்கப்பட்டன. போட்டியை சுற்றுப்புற பகுதியைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் கண்டுரசித்தனர். வாடி வாசல் வழியாக சீறிப்பாய்ந்த கன்றுகளை கண்டு இளைஞர்கள் ஆர்ப்பரித்து மகிழ்ச்சியடைந்தனர்.

Related posts

முன்னோர்களின் ஆரோக்கியத்திற்கும் நீண்ட ஆயுளுக்கும் பாரம்பரிய நெல் ரகமே காரணம்

கூத்தாநல்லூர் அருகே ஆடு திருடிய 2 பேர் கைது

திருத்துறைப்பூண்டியில் புதிதாக பஸ் நிலையம் கட்ட பழைய பேருந்து நிலையம் இடிக்கும் பணி மும்முரம்