என்னை கைது செய்வது கனவில்தான் நடக்கும்: போலீசுக்கு நடிகை மீரா மிதுன் சவால்

சென்னை: தமிழில் ஓரிரு படங்களில் சின்ன கேரக்டரில் நடித்தவர், மீரா மிதுன். அழகி போட்டி நடத்தியதில், அப்பாவி பெண்களை ஏமாற்றியதாக இவர் மீது புகார் மற்றும் வழக்கு இருக்கிறது. அடிக்கடி தனது கிளாமர் படங்கள், சர்ச்சைக்குரிய வீடியோக்கள் வெளியிட்டு தன்னை எப்போதும் பரபரப்பாக வைத்திருப்பார். இந்நிலையில், சமீபத்தில் அவர் பட்டியலின மக்கள் குறித்து பேசி வெளியிட்ட வீடியோ வைரலானது. அவரை வன்கொடுமை தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று, பல்வேறு தரப்பில் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இதை தொடர்ந்து அவர் மீது 7 பிரிவுகளின் கீழ் சைபர் கிரைம் போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில், தன்னை யாராலும் கைது செய்ய முடியாது. அது கனவில்தான் நடக்கும் என்று மீரா மிதுன் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர் பேசியிருப்பதாவது: கடந்த 5 வருடங்களாக என்மீது களங்கம் கற்பிப்பவர்கள் மீது நிறைய புகார்கள் கொடுத்திருக்கிறேன். ஆனால், இதுவரை சைபர் கிரைம் போலீசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. இப்போது என்னை கைது செய்ய வேண்டும் என்று சமூக வலைத்தளங்களில் பேசி வருகிறார்கள். நான் எனது வீடியோவில் தெளிவாகப் பேசியிருக்கிறேன். எனக்கு தொல்லை கொடுத்த ஆண்களைப் பற்றித்தான் அதில் சொல்லியிருக்கிறேன். பட்டியலின  பெண்களை நான் எனது ஷோக்களில் அறிமுகப்படுத்தி இருக்கிறேன். அந்த சமூகத்திலும் என்னை தொந்தரவு செய்தவர்களை பற்றித்தான் பேசியிருக்கிறேன். பொதுப்படையாக பேசவில்லை. இந்த சின்ன விஷயத்துக்காக நாடே போர்க்களமாக வெடித்து, மீரா மிதுனை கைது செய்தே ஆக வேண்டும் என்கிறார்கள். தாராளமாக என்னை கைது செய்யுங்கள். ஏன் காந்தி, நேரு சிறைக்கு போகவில்லையா? ஆனால் என்னை கைது செய்ய முடியாது. அப்படியொரு சூழல் எனக்கு வராது. இதற்காகத்தானே 5 வருடங்களாக முயற்சி செய்து வருகிறீர்கள். தொடர்ந்து முயற்சி செய்துகொண்டே இருங்கள். அப்படியே கைது செய்ய வேண்டும் என்றால் அது கனவில்தான் நடக்கும். இவ்வாறு அவர் பேசியுள்ளார்….

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்