ஊழலை திசை திருப்பவே அதிமுக போராட்டம்: சேம.நாராயணன் கண்டனம்

சென்னை: தமிழ்நாடு மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நல  கூட்டமைப்பு தலைவரும் மண்பாண்ட தொழிலாளர்கள் நல வாரிய முன்னாள் தலைவருமான சேம.நாராயணன் வெளியிட்ட அறிக்கை: வாக்களித்த மக்களை வஞ்சிக்காதே, உள்ள குமுறல்களை உலகுக்கு உரக்க சொல்லும் ஆர்ப்பாட்டத்தை   28ம் தேதி நடத்துவதாக அதிமுக அறிவித்துள்ளது. மு.க.ஸ்டாலின் முதல்வராக பதவியேற்ற போது, கொரோனா 2வது அலை உச்சத்தில் இருந்தது. மக்கள் பரிதவித்தனர். முதல்வர், திறன்பட கையாண்டு தமிழகத்தை காப்பாற்றி வருகிறார். உலக மக்களே பாராட்டி வருகின்றனர். ஏன்,  அதிமுக முன்னாள் அமைச்சர்கள் கூட மனம்திறந்து பாராட்டினார்கள். அதிமுக ஆட்சியில் அரசு கஜானாவையும் காலி செய்துவிட்டு, இடைக்கால நிதிநிலை அறிக்கையை கடந்த பிப்ரவரி 23ம் தேதி ஓ.பன்னீர்செல்வம் தாக்கல் செய்தபோது,  தமிழக கடன்சுமை 5.70 கோடி  என்று தெரிவித்தார். அதிமுக அரசு திவாலாக செல்லும் நிலைக்கு சென்றது. தேர்தல் அறிவிப்புக்கு 5 மணி நேரத்திற்கு முன்புதான் திமுக தேர்தல் அறிக்கை இடம்பெற போகும் அறிவிப்புகளை தெரிந்து கொண்டு மக்களை ஏமாற்றி ஓட்டுக்களை வாங்க விவசாய கடன் தள்ளுபடி, நகைக்  கடன் தள்ளுபடி, உள் இடஒதுக்கீடு போன்ற அறிவிப்புகள் வேகவேகமாக அறிவித்ததை மக்கள் மறந்துவிடவில்லை. மு.க.ஸ்டாலின் வெளிப்படை தன்மையோடு சிறந்த நிர்வாகம், பொற்கால ஆட்சியை நடத்தி வருகிறார். ஒரு தனியார் நிறுவன கருத்து ஆய்வில் இந்தியாவிலேயே சிறந்த முதல்வராக மு.க.ஸ்டாலின் உள்ளார். எனவே அதிமுகவின்  போராட்டம் என்பது,  அரிக்கிறதே என்பதற்காக கொள்ளி கட்டையை எடுத்து தலையில் சொரிந்துகொள்ளும் செயலாகும் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். …

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்