ஊதுபத்தியால் வந்தது வினை வீட்டில் தீப்பற்றி பணம் பொருட்கள் எரிந்து நாசம்

திருமங்கலம், மார்ச் 25: திருமங்கலத்தில் உள்ள ஒரு வீட்டில், ஊதுபத்தியால் பற்றிய தீயில் வீட்டிலிருந்த ரூ.50 ஆயிரம் மற்றும் 2 லட்சம் மதிப்புள்ள மரப்பொருள்கள் எரிந்து நாசமானது. திருமங்கலம் அண்ணாநகரை சேர்ந்தவர் குணசேகரன் பாண்டியம்மாள். இவர்களது வீட்டில் வாடகைக்கு வசிப்பவர் ராஜேந்திரன். தச்சுச்தொழிலாளியான இவர் நேற்று காலை வழக்கம் போல் வேலைக்கு செல்லும் முன்பு வீட்டின் பூஜை அறையில் ஊதுபத்தி ஏற்றி சுவாமி கும்பிட்டுள்ளார்.

பின்னர் தனது வீட்டின் கதவை அடைத்துவிட்டு வேலைக்கு சென்றுவிட்டார். இந்தநிலையில் அவரது வீட்டில் இருந்து தொடர்ச்சியாக அதிக அளவில் புகை வெளியே வருவதை கண்ட வீட்டின் உரிமையாளர் பாண்டியம்மாள், அக்கம்பக்கத்தினரை அழைத்துள்ளார். அவர்கள் வந்து கதவை உடைப்பதற்குள், வீட்டிற்குள் மளமளவென தீப்பற்றி எரியத்துவங்கியுள்ளது. இதனால் அதிர்ச்சியடைந்த பொதுமக்கள் உள்ளே செல்லாாமல், திருமங்கலம் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் அளித்தனர்.

தீயணைப்பு படையினர் விரைந்து வந்து வீட்டில் பற்றிய தீயை அடுத்தடுத்து இருக்கும் வீடுகளுக்கு பரவாமல் தண்ணீரை பீய்ச்சி அடித்து அணைத்தனர். ஆனால், இந்த பணிகள் நிறைவடைவதற்குள் வீட்டின் பீரோவில் இருந்த ரூ.50 ஆயிரம் ரொக்கம் மற்றும் ராஜேந்திரன் வாங்கி வைத்திருந்த 2 லட்சம் மதிப்புள்ள தச்சு வேலை செய்வதற்கான விலை உயர்ந்த மரங்கள் எரிந்து நாசமாகின. இந்த தீ விபத்து குறித்து திருமங்கலம் டவுன் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மேட்டமலை கிராமத்தில் தண்ணீர் கசியும் புதிய வாட்டர்டேங்க் சீரமைக்க மக்கள் கோரிக்கை

வடமாடு மஞ்சுவிரட்டில் விவசாயி மண்டை உடைப்பு

வத்திராயிருப்பில் நெல் கொள்முதல் நிலையம் நான்கு இடங்களில் திறப்பு: விவசாயிகள் மகிழ்ச்சி