ஊட்டி காந்தல் பகுதியில் கலெக்டர் ஆய்வு

 

ஊட்டி, ஜன.8: ஊட்டி நகராட்சி காந்தல் பகுதியில் உள்ள திருவள்ளுவர் தெரு, அம்பேத்கார் நகர் பகுதிகளில் கலெக்டர் ஆய்வு செய்து தூய்மை பணியாளர்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார். நீலகிரி மாவட்டம் ஊட்டி நகராட்சி காந்தல் பகுதியில் உள்ள திருவள்ளுவர் தெரு, அம்பேத்கார் நகர் ஆகிய தூய்மை பணியாளர்கள் வசிக்கக்கூடிய பகுதிகளில் மாவட்ட கலெக்டர் அருணா நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அவர்களிடம் அடிப்படை வசதிகள் குறித்து கேட்டறிந்தார்.

திருவள்ளுவர் தெருவில் பொது நிதி திட்டத்தின் கீழ் ரூ.4.85 லட்சம் மதிப்பீட்டில் சமுதாய கழிப்பறை புனரமைப்பு செய்யப்படுவதை நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டு பணியினை விரைவாகவும், தரமாகவும் முடித்து பொதுமக்களின் பயன்பாட்டிற்கு கொண்டு தர துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். அணிக்கொரை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தின் கீழ் மாணவ, மாணவியர்களுக்கு வழங்குவதற்காக வைக்கப்பட்டிருந்த உணவின் தரத்தினை மாவட்ட கலெக்டர் அருணா திடீர் ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் உணவுக்கூடம், சமையற் பொருட்கள் வைக்கும் அறை, பாத்திரங்கள் வைக்கும் அறை ஆகியவை சுகாதாரமாக பராமரிக்கப்படுகிறதா என்பதையும் பார்வையிட்டார். பள்ளியில் பயிலும் மாணவ, மாணவிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப உணவு பொருட்கள் இருப்பு உள்ளதா?, அட்டவணைப்படி உணவு வழங்கப்படுகிறதா? என கேட்டறிந்தார்.

மாணவ, மாணவிகள் சத்தான உணவு உட்கொண்டு நல்ல முறையில் கல்வி பயில வேண்டும் என்ற உன்னத நோக்கத்தில் தமிழ்நாடு முதலமைச்சர் செயல்படுத்தி வரும் இத்திட்டத்தினை முறையாக செயல்படுத்த வேண்டும் என ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தினார். தொடர்ந்து மாணவர்களின் கற்றல் திறன் குறித்து பார்வையிட்டார். இந்நிகழ்வின்போது ஊட்டி நகர்நல அலுவலர் ஸ்ரீதர், நகராட்சி பொறியாளர்கள், ஊட்டி வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஸ்ரீதரன், நந்தகுமார், உள்ளாட்சி பிரதிநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்