உள்ளாட்சி தேர்தல் முன்விரோதம் திமுக ஒன்றிய கவுன்சிலருக்கு சரமாரி அரிவாள் வெட்டு

கண்டமங்கலம், ஜூலை 16: விழுப்புரம் மாவட்டம் கண்டமங்கலம் ஒன்றியம் பெரியபாபுசமுத்திரம் வார்டு திமுக ஒன்றிய கவுன்சிலர் சரவணன். இவருக்கும், அதே ஊரை சேர்ந்த பாமக பிரமுகர் பிரகாஷ் என்பவருக்கும் இடையே உள்ளாட்சி தேர்தல் மற்றும் தொழில் போட்டி காரணமாக முன்விரோதம் இருந்து வந்துள்ளது. இந்த நிலையில் பெரியபாபுசமுத்திரம் செல்லிப்பட்டு ஐயனாரப்பன் கோயில் அருகே சாலையில் சம்பவத்தன்று மாலை 6.45 மணியளவில் கவுன்சிலர் சரவணன், தன்னுடைய விவசாய நிலத்தில் வெண்டைக்காய் அறுவடை செய்து கொண்டு பைக்கில் வீடு திரும்பியுள்ளார்.

அப்போது அவ்வழியே டிராக்டர் ஓட்டிச்சென்ற பிரகாஷ், சரவணன் மீது ஏற்ற முயன்றுள்ளார். இதில் அதிஷ்டவசமாக உயிர் தப்பிய சரவணன், பிரகாைஷ தட்டிக்கேட்டு்ள்ளார். இதனால் இருவருக்கும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது ஆத்திரம் அடைந்த பிரகாஷ், காலனியால் கன்னத்தில் அடித்து விட்டு கீழே தள்ளி சராமாரியாக தாக்கி, கொலை மிரட்டல் விடுத்து அங்கிருந்து சென்று விட்டார். இது குறித்து சரவணன் கண்டமங்கலம் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். இதையடுத்து இன்ஸ்பெக்டர் ரத்தினசபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் வெள்ளத்தங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தினர்.அதன்பிறகு கவுன்சிலர் சரவணன் இரவு 7.45 மணியளவில், பைக்கில் வில்லியனூரில் வாடகைக்கு குடியிருந்து வரும் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார்.

பெரியபாபுசமுத்திரம் பம்பையாற்றுப் பாலம் அருகே சென்றபோது 2 பைக்குகளில் வந்த 3 பேர், சரவணனை வீச்சரிவாளுடன் வழிமறித்து ஓட ஓட விரட்டினர். மேலும் அவர்கள், பிரகாஷ் அண்ணன்கிட்டே பிரச்னை செய்கிறாயா? எனக்கேட்டு வெட்டியுள்ளனர். தலையில் பலத்த காயம் அடைந்த சரவணன் அங்கேயே மயங்கி விழுந்தார். பின்னர் 3 பேரும் அங்கிருந்து தப்பிச்சென்று விட்டனர். தகவலறிந்த அப்பகுதி மக்கள், அங்கு வந்து சரவணனை மீட்டு அரியூரில் உள்ள தனியார் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சேர்த்தனர். தகவலறிந்த கண்டமங்கலம் இன்ஸ்பெக்டர் ரத்தின சபாபதி, மருத்துவமனைக்கு சென்று வாக்குமூலம் பெற்றார். தொடர்ந்து, பெரியபாபுசமுத்திரத்தை சேர்ந்த பாமக பிரமுகர் பிரகாஷ், அதே பகுதிடைய சேர்ந்த சின்னதுரை ஆகியோர் மீது கொலை மிரட்டல், தாக்குதல், தரக்குறைவாக திட்டுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related posts

மாநகர பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் தினசரி 16 லட்சம் டிக்கெட் விநியோகம்: மேலாண் இயக்குநர் தகவல்

புழல் சைக்கிள் ஷாப் பகுதியில் மாஞ்சா நூல் கழுத்தறுத்து இன்ஜினியர் படுகாயம் : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

புழல் டீச்சர்ஸ் காலனியில் நாய் கடித்து சிறுவன் படுகாயம்