உலக மகளிர் தினத்தை முன்னிட்டு பெண் காவலர்களுக்கு இலவச மருத்துவ முகாம்

 

நாகப்பட்டினம்,மார்ச்9: சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு நாகப்பட்டினம் மாவட்டத்தில் பணிபுரியும் பெண் காவலர்களுக்கு இலவச மருத்துவ முகாம் ஆயுதப்படை மைதானத்தில் நடந்தது. முகாமை எஸ்பி ஹர்ஷ்சிங் தொடங்கி வைத்தார். இதில் நாகப்பட்டினம் மாவட்டத்தில் காவல்துறை பணிபுரியும் பெண் காவல் அதிகாரிகள் மற்றும் காவலர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினர் கலந்து கொண்டனர்.

அப்போது எஸ்பி பேசியதாவது: அனைத்து பெண் காவல்துறையினரும் பணியில் அக்கறை கொள்வது போலவே தன்னுடைய உடல் நலத்திலும் அக்கறை கொள்ள வேண்டும் என்றார். டிஜிட்டல் எக்ஸ்ரே, அல்ட்ரா சவுண்ட், இதய அழுத்த சோதனை, ஆடியோ மெட்ரிக், எக்கோ, இசிஜி அடிப்படை பரிசோதனை, ரத்த மாதிரி சேகரிப்பு போன்ற உடல் பரிசோதனை செய்யப்பட்டது.

 

Related posts

பள்ளிகள் திறப்பையொட்டி பாடப்புத்தகங்கள் பிரித்து அனுப்பும் பணி தொடங்கியது

உலக பட்டினி தினத்தை முன்னிட்டு உணவு வழங்கும் திட்டம்

ரேஷன் அரிசி கடத்தல் வழக்கில் 5 மாதத்தில் 142 பேர் கைது