உறுப்புதானம் செய்தவர்களின் உடல்களுக்கு அரசு மரியாதை: கோட்டாட்சியர் மலர் வளையம் வைத்து அஞ்சலி

திருவள்ளூர் மார்ச் 1: மாவட்டத்தில் உடல் உறுப்புதானம் செய்த இருவரின் உடல்களுக்கு திருவள்ளூர் கோட்டாட்சியர் மலர் வளையம் வைத்து அரசு மரியாதை செலுத்தினார். உடல் உறுப்பு தானம் என்பது சாதாரண விஷயம் அல்ல. அரசியல் கட்சித் தலைவர்கள், முக்கிய பிரமுகர்களுக்கு மட்டுமே அவர்கள் உயிரிழந்த பிறகு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்யப்படுவார்கள். ஆனால் இந்தியாவிலேயே தமிழ்நாட்டில் மட்டுமே இந்த உடல் உறுப்பு தானம் செய்பவர்களுக்கு அரசு மரியாதையுடன் அடக்கம் செய்ய தமிழ்நாடு அரசு அறிவித்திருக்கிறது. அதன்படி திருவள்ளூர் வட்டம், பாண்டூர், கண்ணன் காரணி கிராமத்தை சேர்ந்த தங்கராஜ் மகன் ராஜசேகர்(32) பணியின் போது தவறி விழுந்து உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து உடல் உறுப்பு தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்தனர்.

அதேபோல் ஆவடி வட்டம், திருநின்றவூர், சோழன் தெரு, பிரகாஷ் நகரை சேர்ந்த எல்.மோகன்பாபு(41) என்பவர் மூளைச்சாவு ஏற்பட்டு உயிரிழந்தார். இதனைத் தொடர்ந்து உடல் உறுப்பு தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன் வந்தனர். இதனையடுத்து உடல் உறுப்புதானம் செய்த ராஜசேகர், மோகன்பாபு ஆகியோரின் உடலுக்கு திருவள்ளூர் கோட்டாட்சியர் ஆ.கற்பகம் நேரில் சென்று தமிழ்நாடு அரசின் சார்பில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார். பிறகு அவர்களது குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார். அப்பொழுது வட்டாட்சியர்கள் திருவள்ளூர் வாசுதேவன், ஆவடி விஜயகுமார், பொது மக்கள் மற்றும் உறவினர்கள் உடனிருந்தனர்.

Related posts

காட்பாடியில் மாயமான வடமாநில சிறுமி ஒடிசாவில் மீட்பு தனிப்படை போலீசார் நடவடிக்கை

(வேலூர்) திருமண மண்டபத்தின் உரிமையாளருக்கு அபராதம் பேரூராட்சி நிர்வாகம் அதிரடி பாலாற்றில் குப்பை கொட்டிய

1225 டன் யூரியா மணலியில் இருந்து காட்பாடிக்கு வருகை லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைப்பு வேலூர் உட்பட 4 மாவட்டங்களுக்கு