உடையார்பாளையம் அருகே பதுக்கல் மதுவிற்ற முதியவர் கைது

ஜெயங்கொண்டம், செப்.24: அரியலூர் மாவட்டத்தில் ஆங்காங்கே டாஸ்மாக் மதுபாட்டில் விற்பனை செய்வதாக போலீசாருக்கு அடிக்கடி புகார்கள் வந்தது. இதையடுத்து உடையார்பாளையம் அருகே பதுக்கி வைத்து மது விற்ற ஒருவர் மீது வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரிக்கின்றனர். இதன் அடிப்படையில் உடையார்பாளையம் போலீஸ் எஸ்.ஐ., திருவேங்கடம் மற்றும் போலீசார் சம்மந்தப்பட்ட பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது வாணதிரையன்பட்டினம் தெற்கு தெருவை சேர்ந்த செல்வராசு (62 )என்பவர் அவரது வீட்டின் பின் புறம் டாஸ்மாக் மதுபாட்டில்களை பதுக்கி விற்பனை செய்தது தெரியவந்தது. இது குறித்து கையும் களவுமாக செல்வராசுவை கைது போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Related posts

மலைவாழ் குழந்தைகளுக்கு உதவி

போர்வெல் மோட்டாரில் வயர் திருட்டு

ரயில் நிலைய மேம்பாட்டு பணிகள் ஆய்வு