உசிலம்பட்டியில் பள்ளி மாணவர்களுக்கு இலவச கால்பந்து பயிற்சி

உசிலம்பட்டி, மே 11: உசிலம்பட்டி அரசு மேல்நிலைப்பள்ளி விளையாட்டு மைதானத்தில் உசிலை கால்பந்து கழகம் சார்பாக கோடைகால இலவச கால்பந்து பயிற்சி நடைபெற்று வருகிறது/ இந்த பயிற்சியில் 5 வயதிலிருந்து 14 வயது வரை உள்ள பள்ளி மாணவர்கள் பயிற்சி பெற்று வருகின்றனர. இந்த இலவச கால்பந்து பயிற்சியை உசிலை கால்பந்து கழக தலைவர் வினோதன், செயலாளர் சுபாஷ், பொருளாளர் மணிகண்டன், மேலாளர் யுவராஜ் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
இந்த இலவச கால்பந்து பயிற்சியை சென்னையைச் சேர்ந்த பயிற்சியாளர் பிரதீப் ஜாஷ்வா, ப்ரைனாடு மற்றும் சாம் விஜய் ஆகியோர் அளித்து வருகின்றனர். இந்த பயிற்சியில் நூற்றுக்கும் மேற்பட்ட மாணவர்கள் பயன்பெற்று வருகின்றனர்.

Related posts

அடையாளம் தெரியாத முதியவர் உடல் மீட்பு

கோமாரி நோய் தடுப்பூசி செலுத்தும் பணி தீவிரம்

கூலி தொழிலாளி தற்கொலை