ஈரோட்டில் ரூ.1.08 கோடியில் டவுன் டிஎஸ்பி முகாம் அலுவலகம் முதல்வர் காணொலியில் திறந்து வைத்தார்

 

ஈரோடு, மார்ச் 14: ஈரோட்டில் ரூ.1.08 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்ட புதிய டவுன் டிஎஸ்பி முகாம் அலுவலகத்தை முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி மூலம் திறந்து வைத்தார்.ஈரோடு தெற்கு போலீஸ் ஸ்டேஷன் அருகே தமிழ்நாடு காவலர் வீட்டு வசதிக்கழகம் மூலம் ரூ.1.08 கோடி மதிப்பில் ஈரோடு டவுன் டிஎஸ்பி முகாம் அலுவலகம் புதிதாக கட்டப்பட்டது. இதையடுத்து தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடந்த அரசு விழாவில் பங்கேற்று அங்கிருந்து காணொலி மூலமாக ஈரோடு டவுன் டிஎஸ்பி முகாம் அலுவலகத்தை திறந்து வைத்தார். இதைத்தொடர்ந்து, டவுன் டிஎஸ்பி அலுவலகத்தை பயன்பாட்டிற்கு வழங்கும் விழா நடந்தது. விழாவுக்கு ஈரோடு எஸ்பி ஜவகர் தலைமை வகித்து, டவுன் டிஎஸ்பி முகாம் அலுவலகத்தை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். தொடர்ந்து, டிஎஸ்பி அலுவலகத்தையும், முதல் தளத்தில் உள்ள டிஎஸ்பி குடியிருப்பினையும் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இந்நிகழ்ச்சியில், டவுன் டிஎஸ்பி ஜெய் சிங், தனிப்பிரிவு இன்ஸ்பெக்டர் ராஜபிரபு, தாலுகா இன்ஸ்பெக்டர் நவநீதகிருஷ்ணன், மொடக்குறிச்சி இன்ஸ்பெக்டர் அனுராதா, தெற்கு போக்குவரத்து இன்ஸ்பெக்டர் ராமராஜ், தனிப்பிரிவு எஸ்ஐ.க்கள் ராம்பிரபு, செந்தில் மற்றும் போலீசார் பலர் கலந்து கொண்டனர்.

Related posts

மாநகர பேருந்துகளில் மின்னணு பயணச்சீட்டு இயந்திரம் மூலம் தினசரி 16 லட்சம் டிக்கெட் விநியோகம்: மேலாண் இயக்குநர் தகவல்

புழல் சைக்கிள் ஷாப் பகுதியில் மாஞ்சா நூல் கழுத்தறுத்து இன்ஜினியர் படுகாயம் : மருத்துவமனையில் தீவிர சிகிச்சை

புழல் டீச்சர்ஸ் காலனியில் நாய் கடித்து சிறுவன் படுகாயம்