ஈரோட்டில் எஸ்ஆர்எம்யு தொழிற்சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

 

ஈரோடு, ஆக. 9: ஈரோடு ரயில்வே ஸ்டேஷன் அருகே எஸ்ஆர்எம்யு தொழிற்சங்கத்தின் ஈரோடு ஓபன் லைன் ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு கிளை தலைவர் பக்தவச்சலம் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் ஆறுமுகராஜன் முன்னில வகித்தார். இதில், ஈரோட்டில் பணியாற்றும் ரயில்வே தொழிலாளர்களின் கோரிக்கைகளையும், நிறைவேற்றாமல், தொழிலாளர்களின் ஊக்கத்தொகை, டிஏ போன்றவற்றை பிடித்தம் செய்யும் அலுவலக கண்காணிப்பாளர், கிளர்க் ஆகியோரின் தொழிலாளர்கள் விரோத போக்கை கண்டித்தும், தொழிலாளர்களை தரக்குறைவாக நடத்துவதை கண்டித்தும் கோஷங்கள் எழுப்பினர். இதில், 15 பெண்கள் உட்பட 70க்கும் மேற்பட்ட ரயில்வே ஊழியர்கள் கலந்து கொண்டனர்.

Related posts

தூத்துக்குடியில் மீனவர் பைக் எரிப்பு

தூத்துக்குடியில் வெள்ளத் தடுப்பு நடவடிக்கை ஆலோசனை கூட்டம்

கோவில்பட்டியில் குடோனில் புகையிலை பதுக்கிய வடமாநில வாலிபர் கைது