ஈரோடு ஜவுளி வணிக வளாகத்தில் 41 வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கீடு ஆணை

ஈரோடு, பிப். 4: ஈரோடு ஜவுளி வணிக வளாகத்தில் கடைகள் ஒதுக்கீடு பெற்ற 141 வியாபாரிகளுக்கு அதற்கான ஆணைகளை அமைச்சர் முத்துசாமி வழங்கினார். ரோடு மாநகராட்சி அலுவலக வளாகத்தில் அப்துல்கனி ஜவுளி வணிக வளாக கடை ஒதுக்கீடு ஆணைகள், மாநகராட்சியில் பணியாற்றி ஓய்வுபெற்ற பணியாளர்களுக்கு ஓய்வூதிய பலன்கள் மற்றும் தூத்துக்குடி மாவட்டத்தில் வெள்ளம் பாதித்த பகுதிகளில் தூய்மைப் பணிகளை மேற்கொண்ட தூய்மை பணியாளர்களுக்கு பாராட்டு சான்றிதழ் மற்றும் ஊக்கத் தொகை வழங்கும் நிகழ்வு நேற்று நடைபெற்றது.

கலெக்டர் ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கினார். ஈவிகேஎஸ் இளங்கோவன் எம்எல்ஏ, மேயர் நாகரத்தினம், மாநகராட்சி ஆணையாளர் சிவகிருஷ்ணமூர்த்தி ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் கலந்து கொண்ட அமைச்சர் முத்துசாமி பேசியதாவது, ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட பொதுமக்கள் பயன்பெறும் வகையில் பல்லூர் வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. குறிப்பாக பொதுமக்களின் அடிப்படை தேவைகளான குடிநீர், சாலை வசதி, தெருவிளக்கு வசதி உள்ளிட்ட பணிகள் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட வருகின்றன. மேலும் தூய்மை பணியாளர்களின் பணி என்பது மிகவும் இன்றியமையாத பணியாகும்.

ஈரோடு மாநகராட்சியில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற 39 ஓய்வுதியதாரர்கள் மற்றும் பணிக்காலத்தில் இறந்த 6 பணியாளர்களின் வாரிசுதாரர்கள் என 45 நபர்களுக்கு ஓய்வூதியப்பலன்கள், இறப்பு மற்றும் ஓய்வுகால பணிக்கொடை,
மாநகராட்சியில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் மூலமாக கட்டப்பட்ட கனி மார்க்கெட் வணிக வளாகத்தில் கட்டப்பட்டுள்ள கடைகளை ஏலம் எடுத்த 141 வியாபாரிகளுக்கு கடை ஒதுக்கீடு ஆணைகள் வழங்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

நிகழ்ச்சியில் துணை மேயர் செல்வராஜ், மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் பழனிசாமி, சசிகுமார், சுப்ரமணியம், குறிஞ்சி தண்டபாணி, மாநகராட்சி துணை ஆணையர் சரவணகுமார், மாநகர பொறியாளர் விஜயகுமார், மாநகர நல அலுவலர் பிரகாஷ், மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் எல்லப்பாளையம் சிவக்குமார், அனைத்து வணிகர் சங்க தலைவர் ராஜமாணிக்கம் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

Related posts

விளைச்சல் குறைந்ததால் மாங்காய் விலை உயர்வு

போக்குவரத்து நெரிசலில் தவிக்கும் ராஜபாளையம்

ஓடும் பஸ்சில் ஆசிரியையிடம் நகை திருட்டு