இளையராஜா, பி.டி. உஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டுள்ள இசைஞானி  இளையராஜா, பி.டி.உஷாவுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்துள்ளார். முதல்வர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள சமூக வலைதளப் பதிவு: இசையால் நம் உள்ளங்களையும் மாநிலங்களையும் ஆண்ட ‘இசைஞானி’ இளையராஜா நாடாளுமன்ற மாநிலங்களவையில் உறுப்பினராய்ச் சிறப்புறச் செயல்பட வாழ்த்துகள்! மாநிலங்களவை உறுப்பினர் பதவிக்கு பரிந்துரைக்கப்பட்டுள்ள பி.டி.உஷாவுக்கு வாழ்த்துக்கள். நாடாளுமன்ற விவாதங்களில் அவர் பங்கேற்பது நமது நாட்டின் விளையாட்டு உள்கட்டமைப்பிற்கு பெரும் ஊக்கத்தை அளிக்கும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்’ என்று தெரிவித்துள்ளார்….

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்