இளம்பெண் தீக்குளித்து தற்கொலை

பந்தலூர், ஏப்.7: நீலகிரி மாவட்டம், பந்தலூர் அருகே கொளப்பள்ளி ஸ்கூல் ரோடு பகுதியில் வசித்து வரும் கூலித்தொழிலாளி சதீஷ்குமார் என்பவரது மனைவி அனிதா (23). இவர் நேற்று முன்தினம் வீட்டில் இருந்த போது தீ வைத்து தற்கொலைக்கு முயன்றுள்ளார். பின்னர் அவரின் அலறல் சத்தம் கேட்டு வீட்டில் இருந்தவர்கள் ஓடி சென்று தீயை அணைத்து அவரை பந்தலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்த்துள்ளனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பலியானார்.

அவரது தாயார் அம்பிகா கொடுத்த புகாரின் பேரில் சம்பவம் குறித்து சேரம்பாடி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமணம் ஆகி இரண்டு மாதங்களில் அனிதா தீ வைத்து தற்கொலை செய்து கொண்டதால் ஆர்டிஓ விசாரணை நடைபெற்று வருகிறது.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்