இளங்குமரனாரின் இறவா புகழ் தமிழ்போல என்றென்றும் நிலைத்திருக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: முதல்வர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தமிழையே உயிர்மூச்சாக கொண்டு வாழ்ந்த முதுபெரும் அறிஞரான அய்யா இளங்குமரனார் மறைவு தமிழ்மொழிக்கும், தமிழ்நாட்டுக்கும் ஈடுசெய்ய முடியாத பேரிழப்பாகும். தமிழ் மொழியை, அதன் பண்பாட்டை தமிழர்களின் இல்லந்தோறும் நிலைநிறுத்திடுவதற்காக தனது 94வது அகவையிலும் தொடர்ந்து பணியாற்றியவர் இளங்குமரனார். வள்ளுவர் தவச்சாலை என்பதை நிறுவி, வெள்ளுடை ஞானியாக வாழ்ந்தவர். சமஸ்கிருத மந்திரங்களை முற்றிலும் தவிர்த்து, 4 ஆயிரத்திற்கும் மேற்பட்ட திருமணங்களை திருக்குறள் ஓதியும், தமிழில் வாழ்த்தியும் நடத்தி வைத்தவர் இளங்குமரனார். 500க்கும் மேற்பட்ட நூல்களை எழுதியவர். அவரது மறைவால் வாடும் குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள், தமிழ்ச்சான்றோர்கள் அனைவருக்கும் முதல்வர் என்ற முறையிலும் தனிப்பட்ட முறையிலும் என் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறேன். தமிழ் போல என்றென்றும் நிலைத்திருக்கும் இளங்குமரனாரின் இறவா புகழ். இவ்வாறு அவர் கூறியுள்ளார். முதுபெரும் தமிழ் அறிஞர் இளங்குமரனார்  மறைவுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ்  உள்ளிட்டோரும் இரங்கல் தெரிவித்துள்ளனர்….

Related posts

நண்பர்களுடன் குளித்தபோது விபரீதம்: போரூர் ஏரியில் மூழ்கி தொழிலதிபர் பலி

மக்களுக்கு தொடர்ந்து பணியாற்றும் சமூக சேவகர் மற்றும் நிறுவனங்களுக்கு விருது: வரும் 20ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

எம்கேபி நகர், வியாசர்பாடியில் போதை மாத்திரை, கஞ்சா விற்ற 4 பேர் பிடிபட்டனர்