இலவச கண் சிகிச்சை முகாம்

 

ராஜபாளையம், அக்.6: ராஜபாளையம் சக்கராஜா கோட்டை பூசப்பாடி தாயார் பி.ஏ.சி ராமசாமி ராஜா பண்ணை மாளிகையில் விருதுநகர் மாவட்ட பார்வை இழப்பு தடுப்புச் சங்கம் சக்கராஜா கோட்டை மகாசபை மற்றும் தேசிங்கு ராஜா நினைவாக இலவச கண் சிகிச்சை முகாம் நடைபெற்றது. முகாமை சக்கராஜா கோட்டை ராஜூக்கள் மகாசபை தலைவர் சின்ன வெங்கட ராஜா துவக்கி வைத்தார். சக்தி கண் மருத்துவமனை மருத்துவர் ராஜேஷ் குழுவினர் நூற்றுக்கும் மேற்பட்டோருக்கு கண்புரை, கண்ணீர் அழுத்தம், நீர் வடிதல், மாலை கண், மாறு கண் என அனைத்து கண் நோய்களுக்கும் சிகிச்சை அளித்தனர்.

முகாமில் கண்புரை உள்ளவர்கள் அன்றே மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று இலவச லென்ஸ் பொருத்தப்பட்டது. மேலும் பார்வை குறைபாடு உள்ளவர்கள் லென்ஸ் பொருத்துபவர்களுக்கும் இலவசமாக மருந்து மற்றும் கண் கண்ணாடி சலுகை விலையில் வழங்கப்பட்டது. முகாம் ஏற்பாடுகளை சக்கராஜா கோட்டை சத்திரிய ராஜூக்கள் மகாசபை தேசிங்கு ராஜா பண்ணை குடும்பத்தார் செய்திருந்தனர்.

Related posts

காட்பாடியில் மாயமான வடமாநில சிறுமி ஒடிசாவில் மீட்பு தனிப்படை போலீசார் நடவடிக்கை

(வேலூர்) திருமண மண்டபத்தின் உரிமையாளருக்கு அபராதம் பேரூராட்சி நிர்வாகம் அதிரடி பாலாற்றில் குப்பை கொட்டிய

1225 டன் யூரியா மணலியில் இருந்து காட்பாடிக்கு வருகை லாரிகள் மூலம் பிரித்து அனுப்பி வைப்பு வேலூர் உட்பட 4 மாவட்டங்களுக்கு