இருக்கன்குடி மாரியம்மன் கோயிலில் குவிந்த பக்தர்கள்

 

சாத்தூர், மே 25: சாத்தூர் அருகேயுள்ள இருக்கன்குடி மாரியம்மன் கோயில் தென்மாவட்ட மக்களிடையே மிகவும் பிரசித்தி பெற்றதாகும். இங்கு தினந்தோறும் ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்ய வருகின்றனர். செவ்வாய், வெள்ளி மற்றும் விஷேச நாட்களில் இன்னும் கூட்டம் அதிகமாக இருக்கும். இந்நிலையில் நேற்று வெள்ளிக்கிழமையையொட்டி பக்தர்கள் அதிகாலை 5 மணி முதல் அம்மனை தரிசிக்க
நீண்ட வரிசையில் காத்திருந்தனர்.

அம்மனுக்கு பால், பன்னீர், திருமஞ்சனம், இளநீர், தேன் உள்ளிட்ட பல்வேறு பொருட்களால் சிறப்பு அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னர் அம்மனுக்கு சிறப்பு அலங்காரம், தீபாராதனைகள் நடந்தன. பக்தர்கள் அம்மனுக்கு முடியிறக்குதல், தீச்சட்டி, அங்கப்பிரதட்சணம், பால்குடம், ஆயிரம் கண் பானை, மாவிளக்கு எடுத்து வந்து நேர்த்திக்கடன் செலுத்தினர். பக்தர்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை கோயில் நிர்வாக அறங்காவலர் குழு தலைவர் ராமமூர்த்தி பூசாரி மற்றும் அறங்காவலர்கள் செய்திருந்தனர்.

Related posts

பைரவருக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை

ஸ்ரீராமகிருஷ்ணா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் +1 வகுப்பு துவக்க விழா

தேவனூர் கிராமத்தில் முன்னாள் எம்பி. எஸ்.சிவசுப்ரமணியன் 5ம் ஆண்டு நினைவு தினம்