இரவில் வீட்டை இடித்து உணவு தேடிய காட்டு யானை

கூடலூர்: நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள அல்லூர் வயல் பகுதியில் வசிப்பவர் வாசுதேவன். இவர் இங்குள்ள தனியார் நிறுவனம் ஒன்றில் இரவு நேர காவலாளியாக பணிபுரிகறார். நேற்று முன்தினம் இவர் பணிக்கு சென்று விட்ட நிலையில் வீட்டில் அவரது மனைவி குழந்தைகள் இருந்துள்ளனர். நள்ளிரவு சுமார் 12 மணியளவில் அப்பகுதிக்கு வந்த ஒற்றை காட்டு யானை வீட்டின் முன் கதவு பக்கத்து சுவற்றை இடித்து துதிக்கையை உள்ளேவிட்டு உணவு தேடியுள்ளது.உள்ளே அரிசி, பருப்பு உள்ளிட்ட பொருட்கள் எதுவும் கிடைக்காததால் யானை சிறிது நேரம் அங்கேயே நின்று உள்ளது. இதையடுத்து வீட்டில் இருந்தவர்கள் வேறு ஒரு அறையில் பதுங்கி இருந்தனர். இவர்கள் மூலம் யானை வந்திருப்பதை அறிந்த அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்து சத்தம் போட்டு யானையை விரட்டினர். இத்தகவலறிந்து சம்பவயிடம் விரைந்து வந்த வனத்துறையினர் விசாரணை நடத்தினர்….

Related posts

நான் முதல்வன்’ திட்டத்தின் கீழ் ஒரு வாரம் இங்கிலாந்தில் பயிற்சி முடித்து சென்னை திரும்பிய 25 மாணவர்கள் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர்

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு

திருமணம் செய்யாமல் சேர்ந்து வாழ்ந்தவரை சட்டப்பூர்வ வாரிசாக ஏற்றுக் கொள்ள முடியாது: ஐகோர்ட் தீர்ப்பு