இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு 20 சதவீதம் ஊதிய உயர்வு

மும்பை: இந்திய கிரிக்கெட் கவுன்சிலின் மிகவும் முக்கியமான அபெக்ஸ் கவுன்சில் ஆலோசனைக்கூட்டம் வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. இதில் கேப்டன்சி, வீரர்கள் தேர்வு என எதிர்கால திட்டங்கள் குறித்து முக்கிய முடிவுகள் எடுக்கப்படும். இதில் வீரர்களின் ஒப்பந்தங்களும் புதுப்பிக்கப்படும். ஒவ்வொரு ஆண்டும் இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு ஒப்பந்தம் போட்டு, பிசிசிஐ ஊதியம் நிர்ணயிக்கும். அந்த வகையில் இந்த முறை ரகானே, இஷாந்த் சர்மா, விருதிமான் சகா போன்ற வீரர்கள் ஒப்பந்தத்தில் இருந்து நீக்கப்பட உள்ளனர். மேலும் தற்போதைய சம்பளத்தில் இருந்து 10 முதல் 20% சதவீதம் வரை கூடுதலாக கொடுக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. இந்திய கிரிக்கெட்டில் தற்போது மொத்தம் 4 வகையான பிரிவுகளின் கீழ் வீரர்களுக்கு ஊதியம் தரப்படுகிறது. அதன்படி A+ கிரேட் – ரூ.7 கோடி, A கிரேட் – ரூ.5 கோடி, B கிரேட் – ரூ.3 கோடி, C கிரேட் – ரூ.ஒரு கோடி என வீரர்களின் செயல்பாடுகளை வைத்து பிரிக்கப்படும். அதற்கேற்றார் போல ஊதியங்கள் கொடுக்கப்பட்டு வருகிறது. கடந்த 4 ஆண்டுகளாக ஒரே ஊதியம் இருந்த சூழலில் தற்போது உயர்த்தப்படுகிறது. கடைசியாக கடந்த 2017ம் ஆண்டு வீரர்களின் சம்பளம் உயர்த்தப்பட்டது. ஆனால் அதன்பின்னர் கொரோனா காரணமாக ஏற்பட்ட பாதிப்புகளால் பழைய ஊதியமே தொடரப்பட்டது. ஆனால் கடந்தாண்டு 2 புதிய ஐபிஎல் அணிகள் விற்கப்பட்டதில் இருந்தும், ஐபிஎல் ஒளிபரப்பு உரிமைகளில் வந்த பணத்தின் மூலம் இந்த ஊதிய உயர்வு கொடுக்கப்பட உள்ளது….

Related posts

ஸ்காட்லாந்தை வீழ்த்திய ஆஸி

7000 ரன்களை கடந்து ஸ்மிரிதி சாதனை

சாம்பியன் இத்தாலி சாகசம்